Posts

இயற்கை விவசாயம் என்றால் என்ன?

Image
இயற்கை விவசாயம் என்றால் இயற்கையோடு இணைந்து ரசாயன உரம் மற்றும் பூச்சிகொல்லிகளை பயன்படுத்தாமல்,மாடுகளின் சாணம்,சிறுநீர் மற்றும் மண் புழு உரம் ஆகியவற்றை கொண்டு விவசாயம் செய்தல்...

பருத்தியில் வரும் கெண்டை நோயை தடுக்க ஆலோசனை

Image
பருத்தியில் வரும் கெண்டை நோய் (கெண்டை நோய் என்பது, பருத்தி செடி பெரியதாகி காய் பிடிக்கும் சமயத்தில், செடியின் கீழ் பகுதி முறிந்து விழுந்து செடி காய்ந்து விடும்) இதை தடுக்க பருத்தி செடிக்கு (60 ம் நாள்) மண் அணைக்கும் போது கொடுக்கும் உரத்துடன் ஏக்கர்க்கு 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து பயன்படுத்தினால், இந்த நோய் தாக்குதலை முன்கூட்டியே தடுக்கலாம்.

ஆரோக்யமான வேளாண்மை செய்ய சில ஆலோசனைகள்

Image
ஆரோக்யமான வேளாண்மை செய்ய சில ஆலோசனைகள்: 1.தாழ்வான பகுதியிலுள்ள வயல்வெளிகளில் இயற்கை வேளாண்மை செய்வதென்றால் அவ்வயல்களைச் சுற்றி கரைகளை உயர்த்தி அமைக்கவேண்டும். அப்பொழுதுதான் மழைக்காலங்களில் மற்ற வயல்களிலுள்ள ரசாயனப் பொருட்கள் மழைநீரில் வருவது தடுக்கப்படவேண்டும். 2.இயற்கை விவசாயத்திற்கு இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்தும் முன்னர் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் பாலிதீன் பேப்பர்களை பயன்படுத்துவதை தவிர்த்து வருதல் வேண்டும். அப்பொழுதுதான் மண்ணின் மலட்டுத்தன்மை முதலில் சர ியாகும். 3. விதைகளில் முற்காலத்தில் பயன்படுத்திய நாட்டு ரகங்களையே பயன்படுத்துதல் நல்லது. 4. அதிக பொருட்செலவில் இடுபொருள்களை இட்டு அதிக மகசூல் என்பதைவிட குறைந்த செலவில் ஆரோக்கியமான இடுபொருட்கள் இட்டு சராசரியான மகசூல் என்ற இலாப நோக்கத்தை பின்பற்றவேண்டும். 5.தண்ணீர் மற்றும் மின்பற்றாக்குறை சிரமங்களை கருத்தில்கொண்டு தெளிப்பு நீர், சொட்டுநீர் மற்றும் மரங்களுக்கு பானையில் திரியிடும் முறை போன்றவற்றை பயன்படுத்தலாம். 6. களைகளை நீக்க மூடாக்கு முறைகளை பயன்படுத்தலாம். 7.இயற்கைமுறைகளில் பூச்சிக்

தண்ணீர்

Image
தற்போதைய சூழலில் வேலையாள் பற்றாகுறை தண்ணீர் பற்றாகுறை போன்ற பிரச்சனைகளால் விவசாயிகள் மத்தியில் மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது, இருந்தபோதும் சம்சாரிகளிடம் சிறு தயக்கம் மரம் வைத்தால் 25, 30 ஆண்டுகள் காத்திருக்கவேண்டுமே அதுவரை வருமானத்திற்கு என்ன செய்வது என்ற குழப்பம், இதற்க்கு தீர்வு தான் கலப்பு மரம் வளர்ப்பு. ஒரே வகையான வயது அதிகம் உடைய மரங்களை வைத்துவிட்டு பல வருடம் காத்திருப்பதைவிட வெவ்வேறு வயதுடைய மரங்களை கலந்து நடுவதன் மூலம் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை வருமானம் கிடைக்கும், வரப்பு ஓரங்களில் தேக்கு, வேங்கை, மகோகனி, ரோஸ்வூட், மாஞ்சியம், ஆச்சா போன்ற மரங்களையும் இடையில் குமிழ், மலைவேம்பு போன்ற மரங்களையும் 15 அடி இடைவெளில் நடவேண்டும் இடைப்பட்ட பகுதில் சிங்குனிய சவுக்கு 5 அடி இடைவெளில் நடவேண்டும். இவ்வாறு நடும்போது சவுக்கு 4 ஆண்டுகளிலும் குமிழ் 8 ஆண்டிலும் வருமானம் தரும், குமிழ் மருதாம்பு மரம் என்பதால் அடுத்த 7 ஆண்டுகளில் இரண்டம்முறையாக அறுவடைக்கு வரும், தேக்கு, வேங்கை, மகோகனி போன்ற மரங்களை 20, 25 ஆணுகளுக்குபின் அறுவடை செய்யலாம். இவ்வாறு பல

ஆடு வளர்ப்பு முறைகள்

1. ஆடு வளர்ப்பு அனைத்துச் சூழலுக்கும் ஏற்றதாகும். அதிகப் பராமரிப்பு தேவையில்லை. சிறிய இடம் மற்றும் எளிய கொட்டகை போதுமானது. 2. குறைந்த முதலீடு மற்றும் உடனடி வருவாய் 3. வெள்ளாட்டிலிருந்து பால் மற்றும் கறி ஆகிய இரண்டிலிருந்தும் வருமானம் கிடைக்கிறது. 4. ஒரு ஆட்டிலிருந்து சராசரியாக 22-30 கிலோ கறி கிடைக்கின்றது. அனைத்து விதமான மக்களும் உண்ணக் கூடிய இறைச்சி. 5. அதிகமான குட்டிகளை ஈனும் விகிதம். ஒவ்வொரு முறையும் சராசரியாக 2-3 குட்டிகளை ஈனுகிறது நல்ல எரு கிடைக்கிறது., வருடம்முழுவதும்வேலை வெள்ளாட்டு இனங்கள் சிறந்த இந்திய இனங்கள் ஜம்நாபாரி நல்ல உயரமானவை • காதுகள் மிக நீளமனவை • ரொமானிய மூக்கமைப்பு கொண்டவை. • கிடா 65-85 கிலோ பெட்டை - 45-60 கிலோ. • பெரும்பாலான ஆடுகள் ஒரு குட்டியே மட்டும் ஈனும் • 6 மாத குட்டிகளின் எடை 15 கிலோ. தினம் 2- 2.5 லிட்டர் பால் கொடுக்கும் திறன் தலைச்சேரி / மலபாரி • வெள்ளை , பழுப்பு மற்றும் கருப்பு நிறங்கள் • 2-3 குட்டிகளை போடும் திறன் கிடா - 40-50 கிலோ பெட்டை - 30 கிலோ போயர் • இறைச்சிக்காக உலகம் முழுவதும் வளர்க்கப்படுகிறது. • வேகமான வளர்ச்சி திறன் கொ

இயற்கை வழி பூச்சி விரட்டி

இயற்கை வழி பூச்சி விரட்டி!பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த, பயன்படுத்தப்படும் தாவரச்சாறே தாவர பூச்சிவிரட்டி என்று அழைக்கப்படுகிறது. இவற்றை இயற்கை விவசாயத்தில் இரசாயனப் பூச்சி கொல்லிகளுக்கு மாற்றாகப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச் சுழல் மாசுபடாமல் பாதுகாக்கப்படுகின்றது. இயற்கையில் இரண்டு வகையான பூச்சிகள் உள்ளன. இவற்றில் ஒருவகை தாவரத்தை உண்டு விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தும். இரண்டாவது வகை தாவரங்களுக்கு தீங்க விளைவிக்கும் பூ ச்சிகளை உண்டு தாவரங்களின் வளர்ச்சியைப் பாதுகாப்பவை. தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த, பூச்சிக் விரட்டிகளைப் பயன்படுத்துவதால் நன்மை பயக்கும் பூச்சிகளும் கொல்லப்படுவதில்லை. மாறாக பூச்சிகள் தாவரத்திலிருந்து விரட்டப்படுகின்றன. எனவே பூச்சிகளுக்கு வெறுப்புணர்ச்சியை ஊட்டக்கூடிய தாவரங்களை பூச்சி விரட்டியாக பயன்படுத்துவதே இம்முறையின் நோக்கமாகும்.பூச்சி விரட்டி கரைசல் தயாரிக்க இலைகளை தேர்வு செய்யும் முறை, 1. கசப்பு சுவையுடன் இருக்க வேண்டும். (எ.கா) வேம்பு, சோற்றக்கற்றாழை, குமிட்டிகாய் 2. இலைகளை ஒடித்தால் பால்

நிலத்து நீரை உலர விடாத உயிர்வேலி!

இயற்கை வேளாண்மையில் தெரிஞ்சுக்க வேண்டிய முக்கியமான யுக்தி’’ நிலம்,  உலராமல் இருக்க உயிர்வேலி! '‘காத்து, அது போற இடத்துல இருக்கற ஈரத்தை எல்லாம் உறிஞ்சுகிட்டு, நிலத்தை உலரவைச்சிட்டுப் போயிடும். காத்து, ஈரத்தை எடுத்துட்டுப் போகாம தடுக்குறதுதான் உயிர் வேலி வேளாண்மை. சவுண்டல், அகத்தி, கிளரிசிடியா, நொச்சி மாதிரியான பயிருங்களை வேலிப்பயிரா நட்டு, உயிர்வேலி அமைச்சுக்கணும். வேலியோரமா வளந்து நிக்குற மரங்க, காத்தோட வேகத்தை தடுத்து, நிலத்துல இருக்கற ஈ ரப்பதத்-தைத் தக்க வைச்சுக்கும். உயிர்வேலியை மழைக்-காலத்துல நட்டுட்டா, நல்லா வேர் பிடிச்சுக்கும். பிறகு எந்த வறட்சியிலும் காஞ்சு போகாது.  தோட்டத்திற்கு ஒரு நல்ல வேலி மிகவும் அவசியம். உயிர் வேலியே மற்ற வேலிகளைவிட சிக்கனமாகும். வறட்சி எதிர்ப்புத்திறன்,விதையின் மூலம் சுலபமான பயிர் பெருக்கம், விரைவான வளர்ச்சி அடர்த்தியான இலைகள், கடும் கவாத்திற்கு தாங்கும் திறனுடன் இருக்கும் செடிகள் உயிர் வேலிக்கு ஏற்றவையாகும். காற்றுத் தடுப்புக்கு தோட்டத்தைச் சுற்றிலும் பல வரிசைகளில் நடப்பட்டு காற்றின் வேகத்தை குறைப்பதால் காற்று அதிகமா