நிலத்து நீரை உலர விடாத உயிர்வேலி!

இயற்கை வேளாண்மையில் தெரிஞ்சுக்க வேண்டிய முக்கியமான யுக்தி’’ நிலம்,  உலராமல் இருக்க உயிர்வேலி!

'‘காத்து, அது போற இடத்துல இருக்கற ஈரத்தை எல்லாம் உறிஞ்சுகிட்டு, நிலத்தை உலரவைச்சிட்டுப் போயிடும். காத்து, ஈரத்தை எடுத்துட்டுப் போகாம தடுக்குறதுதான் உயிர் வேலி வேளாண்மை. சவுண்டல், அகத்தி, கிளரிசிடியா, நொச்சி மாதிரியான பயிருங்களை வேலிப்பயிரா நட்டு, உயிர்வேலி அமைச்சுக்கணும். வேலியோரமா வளந்து நிக்குற மரங்க, காத்தோட வேகத்தை தடுத்து, நிலத்துல இருக்கற ஈரப்பதத்-தைத் தக்க வைச்சுக்கும். உயிர்வேலியை மழைக்-காலத்துல நட்டுட்டா, நல்லா வேர் பிடிச்சுக்கும். பிறகு எந்த வறட்சியிலும் காஞ்சு போகாது. 

தோட்டத்திற்கு ஒரு நல்ல வேலி மிகவும் அவசியம். உயிர் வேலியே மற்ற வேலிகளைவிட சிக்கனமாகும். வறட்சி எதிர்ப்புத்திறன்,விதையின் மூலம் சுலபமான பயிர் பெருக்கம், விரைவான வளர்ச்சி அடர்த்தியான இலைகள், கடும் கவாத்திற்கு தாங்கும் திறனுடன் இருக்கும் செடிகள் உயிர் வேலிக்கு ஏற்றவையாகும்.

காற்றுத் தடுப்புக்கு தோட்டத்தைச் சுற்றிலும் பல வரிசைகளில் நடப்பட்டு காற்றின் வேகத்தை குறைப்பதால் காற்று அதிகமாக வீசும் பகுதிகளில் காற்றுத் தடுப்பு வேலியானது மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. பொதுவாக காற்றுத் தடுப்பு வேலி உயரத்தைவிட நான்கு மடங்கு தூரம் திறம்பட செயல்படும்.

வேலிமசால்,கிளுவை போன்றவற்றை உயிர் வேலியாக அமைப்பதன் மூலம் அவற்றை கவாத்து செய்யும் போது கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுத்தலாம்.

Comments

Popular posts from this blog

இயற்கை விவசாயம் என்றால் என்ன?

ஆடு வளர்ப்பு முறைகள்

தண்ணீர்